/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/1404.jpg)
ஜி.வி பிரகாஷ் நடிப்பில் வெளியான வாட்ச் மேன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான சம்யுக்தா ஹெக்டேஅடுத்ததாக ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி, வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான மன்மதலீலை ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார். இதனைதொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பிற மொழிப் படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில்தற்போது கிரீம் என்ற கன்னட படத்தில் சம்யுக்தா ஹெக்டே நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பெங்களூருவில் உள்ள கண்டீரவா ஸ்டுடியோவில் முழு வீச்சில் நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில் இப்படத்தில் நடிகை சம்யுக்தா ஹெக்டேவுக்கு அதிரடி சண்டைக் காட்சிகள் இருப்பதால் அது சம்பந்தப்பட்ட காட்சிகளை படக்குழு படமாக்கி வந்தனர். அப்போது மேலிருந்து திடீரென கீழே விழுந்த சம்யுக்தா ஹெக்டெவுக்கு தலை மற்றும் காலில்பலத்த காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து படக்குழு சம்யுக்தா ஹெக்டேவை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் நன்றாக ஓய்வு எடுக்க அறிவுறுத்தியுள்ளனர். இதனால் படப்பிடிப்பையும் தற்காலிகமாக படக்குழு நிறுத்தி வைத்துள்ளது. இதனைதொடர்ந்து சம்யுக்தா ஹெக்டேவின்காலில் கட்டுப் போட்டுள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)